தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொருளணியியல் - V

  • பாடம் - ஐந்து D03145 - பொருளணியியல் - V

    E

    இப்பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் இருபத்திரண்டு முதல் இருபத்தேழு வரை கூறப்படும் உதாத்த அணி, அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறு அணிகளைப் பற்றிச் சொல்கிறது

    இந்த ஆறு அணிகளின் இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    உதாத்த அணி, அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறு அணிகளுக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வணிகள் ஒவ்வொன்றிற்கும் தண்டியலங்கார ஆசிரியர் குறிப்பிட்டுக் கூறும் வகைகள் எவை எவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    அவ்வகைகளில் குறிப்பிடத்தக்க முக்கியமான சிலவற்றிற்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின்பொருள் ஆகியவற்றை எல்லாம் எடுத்துக் கூறும் ஆற்றல்பெறலாம்.

    அப்பாடல்களில் அமைந்துள்ள அணிகளின்இலக்கணப் பொருத்தத்தை விளக்கிக் காட்டும் திறத்தைப்பெறலாம்.

    மேலும் இவ்வணிகளில் சில, தமிழ் இலக்கியங்களில்பயின்று வருவதைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டும்திறம் பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 18:40:16(இந்திய நேரம்)