தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - பதிலிடு பெயர்கள்

 • பாடம் - 1

  D04121 பதிலிடு பெயர்கள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      பதிலிடு பெயர் என்றால் என்ன என்பதை விளக்கிக் காட்டுகிறது. மொழியியலார் வகைப்படுத்திக் காட்டும் பதிலிடு பெயர்களைக் குறிப்பிடுகிறது. பதிலிடு பெயர்கள் பற்றிய சிந்தனை தமிழிலக்கண நூலார்க்கு இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலம், இடைக்காலம், தற்காலம் என்னும் வெவ்வேறு காலகட்டங்களில் பதிலிடு பெயர்கள் பெற்ற வளர்ச்சி, மாற்றங்கள் போன்றவற்றை விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

   
  • பதிலிடு பெயர் குறித்து மொழிநூலார் தரும் விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

  • மொழியியலார் குறிப்பிடும் மூவகைப் பதிலிடு பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம்.

  • மொழியியலார் குறிப்பிடும் பதிலிடு பெயர்களுக்குத் தமிழிலக்கண நூலார் முதன்மை இடம் தந்திருப்பதை அறியலாம்.

  • மூவிடப் பெயர்கள் பிற பெயர்களினின்று வேறுபட்டு அமைந்திருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.

  • மூவிடப் பெயர்கள் ஒவ்வொன்றிலும் காலந்தோறும் வழங்கிய     வடிவங்களையும், அவை அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் அறியலாம்.

  • தன்மைப் பன்மையில் இருவேறு வடிவங்கள் இருப்பதன் காரணத்தை அறியலாம்.

  • தான், தாம் என்னும் படர்க்கை இடப்பெயர்கள் தற்காலத் தமிழில் பல்வேறு நிலைகளில் வழங்கி வருவதை அறியலாம்.

  • தமிழில் சுட்டு, வினாப் பெயர்கள் பண்பட்ட ஓர் ஒழுங்கான முறையில் உருவாகி அமைந்திருப்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:12:06(இந்திய நேரம்)