Primary tabs
இந்தப் பாடம் சொற்பிறப்பு ஆய்வு குறித்தும், அவ் ஆய்விற்குச் சொற்பொருள் எங்ஙனம் துணை நிற்கின்றது என்பதைப்பற்றிய செய்திகளையும் விளக்குகிறது. சொற்பொருள் தொடர்பு இல்லாமல் ஒரு சொல்லுக்குரிய பிறப்பினைக் கண்டறிதல் என்பது இயலாத ஒன்று. எனவே, அவ்விரண்டிற்குமுள்ள தொடர்பினை விளக்கிக் கூறுவதாக இப்பாடம் அமைந்துள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- சொற்பிறப்பினை அறிந்துகொள்வதற்கு, சொற்பொருள் வேறுபடும் முறைகள்.
- சொற்களின் வேர்ப்பொருள் மாற்றம் அடைந்து இறுதிநிலையை அடையும் முறை.
- சொற்பொருளால் ஏற்படும் சார்புநிலை, இனந்தழுவல், இயைபுடைமை, எதிர்நிலை, வழக்காறு இழத்தல் போன்ற பல்வேறு மாற்றங்கள்.