Primary tabs
இந்தப்பாடம் பழந்தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களில், ஒரு சொல் பலபொருள் குறித்தும், ஒருபொருட் பலசொல் குறித்தும் விளக்குகின்ற செய்திகளைப் புலப்படுத்துகிறது. மேலும், சொல்லுக்குரிய பலபொருட்களோ, பொருளுக்குரிய பல சொற்களோ உருவாவதற்குரிய காரணங்களை விளக்குவதாக இப்பாடம் அமைந்துள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தொல்காப்பியம், நன்னூல் போன்ற பழந்தமிழ் இலக்கண நூல்கள், ஒருசொல் ஒரு பொருள் குறித்தும், ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருட் பலசொல் குறித்தும் தெரிவிக்கும் கருத்துகள்.
- ஒருபொருளைக் குறிக்கின்ற பலசொற்கள் இருப்பினும், அச்சொற்பொருளிடையே உள்ள நுண்ணிய வேறுபாடுகள் புலப்படும் தன்மை.
- ஒருசொல் பலபொருள் உருவாவதற்குரிய காரணங்கள், ஒரு பொருட் பலசொல்லின் வகைகள்.