தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.8 தொகுப்புரை

        கட்டடக் கலையைப் பொறுத்த வரையில் பண்டைக் காலக் கட்டடங்கள் கிடைக்காத நிலையில், நூல்கள் வாயிலாகவும் களஆய்வு வாயிலாகவும் பல செய்திகளைத் திரட்ட வேண்டிய நிலையுள்ளது. எனவே, நாட்டுப்புற வியலாய்வு எப்படிச் சென்றுள்ளது என்று கண்டு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால், பழைய சக்தி வடிவங்களும் காவல் தெய்வ வடிவங்களும் புதிய பெயர்கள் தாங்கி நம்மிடையே உள்ளன என்பது இப்பாடம் வாயிலாக விளக்கம் பெறுகிறது.

        சுற்றுப்புறச் சூழலுக்கான தூய்மை, சிறுதெய்வங்களை ஆற்றங்கரை போன்ற இடங்களிலே நிறுவுவதால் உண்டாகிறது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.

        சிற்றூர்ப்புற மக்களிடம் காணலாகும் சமய நம்பிக்கை, சிறுதெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதால் வெளிப்படுத்தப்படுகிறது ; பண்பாட்டுச் சார்பான செய்திகளெல்லாம் இந்தப் பாடம் வாயிலாகத் தெரியப்படுத்தப் படுகின்றன.

        பௌத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் தத்தம் வழிபாட்டு இடங்களை எவ்வாறு போற்றி வருகின்றனர் என்பது தெரிய வந்தது.

        தமிழ்நாடு பல சமயங்களும் கலந்துறவாடும் சூழலைப் பல நிலைகளில் பெற்றுள்ளது என்பது நன்கு விளக்கம் பெற்றுள்ளது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    சைத்தியம் விகாரம் ஆகியவற்றை விளக்குக.
    2.
    நிசீதிகை என்றால் என்ன?
    3.
    குமரி மாவட்டத்தில் எங்கெங்குச் சமணப் பிரசாரத் தாவளங்கள் இருந்தன?
    4.
    கத்தோலிக்கர், புராட்டஸ்டெண்டு ஆகியோர் தேவாலயங்களில் காணலாகும் மாற்றங்கள் யாவை?
    5.
    தர்கா, மசூதி ஆகியவற்றை விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2017 17:34:37(இந்திய நேரம்)