தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள்

 • பாடம் 2

  P10142  இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தமிழ்ப் பெண் நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன் குறிப்பிடத்தக்கவர். அவர் தம் சமூக நனவுமிக்க படைப்புகளால் வாசகர்களிடையே மட்டுமின்றித் தமிழ்நாட்டு அறிவாண்மையரிடையேயும் பெரிதும் பேசப்படுகிறவராகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் பாடம் இராஜம் கிருஷ்ணனை அறிமுகம் செய்து அவர் எழுதிய சமூகப் புதினங்கள் வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப் பார்வை, பாத்திரப்படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

  இராஜம் கிருஷ்ணன் புதினங்கள் மூலம் பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
  குடும்பம், வாழ்க்கை, சமுதாயம், ஜனநாயகம் பற்றிய இராஜம் கிருஷ்ணனின் மதிப்பீட்டை அறியலாம்.
  இராஜம் கிருஷ்ணனின் சமுதாயப் பார்வை எந்த அளவிற்குத் தீவிரத்தன்மையும் நுட்பமும் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  இராஜம் கிருஷ்ணனின் நடையில் காணப்படும் எளிமை, உவமை வர்ணனை, வட்டார வழக்கு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:26:03(இந்திய நேரம்)