Primary tabs
-
3.0 பாட முன்னுரை
‘என் எழுத்தும் தெய்வம் என் எழுதுகோலும் தெய்வம்’ என்று முழங்கியவர் பாரதியார். பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பாரதி கவிதைக்கும் உரைநடைக்கும் புத்தொளி தந்தவர். படைப்பாளனின்எந்தக் கருத்தும் எளிமையாகச் சமுதாயத்தை அடைய வேண்டும்என்ற குறிக்கோளினை உடையவர் பாரதியார். பல மொழிகளைக் கற்ற பாரதியார் யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிமையான மொழியை எங்குமே கண்டதில்லை என்று போற்றியுள்ளார். பண்டிதர் நடையில் இருந்த தமிழ்மொழியை எளிமைப்படுத்தி, இனிமைப்படுத்திக் கொடுத்தவர் பாரதியார்.