Primary tabs
-
பாடம் - 3
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழ் உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றவர் பாரதியார் என்பதை விளக்குகிறது. புதிய தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பாரதியாரை அறிமுகம் செய்கிறது. அவர் எழுதிய உரைநடை வழி வெளிப்படும் நடைத்திறனை விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
- பாரதியின் உரைநடை இலக்கியங்கள் அரசியல், சமூகம், கலை, தத்துவம் முதலான பலவகைப்பட்ட பொருள்களைத் தழுவி எழுதப் பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- பாரதியின் உரைநடை மூலம் அவருடைய ஆளுமை, தனித்தன்மை, அறிவு, இலக்கியப் பயிற்சி, பிறமொழிப் புலமை ஆகியவை புலப்படுவதை அறிந்து கொள்ளலாம்.
- பாரதியின் மொழிநடை மூலம் தமிழ்மொழியின் இனிமையையும் எளிமையையும் உணரலாம்.