தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02211-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    1.

    பாரதியார் தான் எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு’ சிறுகதையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி யாது?

    “ஒரு ஜாதி, ஓர் உயிர், பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம், பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம். மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ்வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும், அமரத்தன்மையும் கொடுக்கும். இந்நூலைப் பாரதநாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று தான் சிறுகதை எழுதியதன் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:36:28(இந்திய நேரம்)