தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 6

  P10216 திரு.வி.க. உரைநடை

  E  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தமிழ்மொழி உரைநடை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த இடம் பெற்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். அவர் இலக்கிய மேடைகளிலும், அரசியல் மேடைகளிலும் தொழிற்சங்க மேடைகளிலும் இருபதாம் நூற்றாண்டின் இனிய தமிழ்த் தென்றலாய் வீசி வந்தவர். அவருடைய உரைநடைத் திறனை இந்தப் பாடம் விளக்குகிறது.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்:

  • திரு.வி.க. இன்றைய தமிழ் உரைநடையின் வடிவத்திலும், பொருளிலும், நடையிலும் நல்ல பல மாற்றங்களையும் கொண்டு வந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    
  • திரு.வி.க.வின் ஆளுமை, தனித்தன்மை, அறிவு, இலக்கியப் பயிற்சி, பிறமொழிப் புலமை ஆகியவற்றால் உருவான உரைநடையின் சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.
    
  • திரு.வி.க.வின் மொழிநடை, தமிழ்மொழியின் இனிமையையும் எளிமையையும் புலப்படுத்துவதை உணரலாம்.   
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:41:17(இந்திய நேரம்)