Primary tabs
-
2.0 பாட முன்னுரை
தமிழ்மொழி இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இதில், நாடகத் தமிழ் என்னும் சொல் வழக்கே தமிழ்மொழி பெற்றிருந்த நாடகப் பழைமையைக் காட்டும். தொல்காப்பியத்திலேயே நாடகம் என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது.நாடகம், நாடகக் கணிகை, நாடகக் காப்பியம், நாடக மகளிர், நாடக மடந்தையர் எனப் பல சொற்கள் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் தமிழின் நாடகப் பழைமையைக் காட்டும்.