தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. இவரது முதல் நாடகமே கவிதை நாடகம். அதுவும் நடிப்பதற்கு உரிய நாடகம்; மீண்டும் மீண்டும் படித்து இன்புறுவதற்கு உரிய நாடகம்; அரங்க அமைவுக்கு இடம் தரும் அழகிய காட்சிப் பின்புலங்கள், மொழியின் செவ்வியல்பு நிலையை உறுதி செய்வதற்கு ஏற்ற நாடக உரையாடல்கள் கொண்ட நாடகம் எனப் பல நிலையிலும் தமிழன்னையின் மணிமகுடமாய் மனோன்மணீயம் திகழ்கிறது என்பதை இப்பாடத்தில் இடம்பெற்ற செய்திகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
     
    1)

    சிவகாமி சரிதத்தில் வரும் கதை நாயகி எந்த ஊரில் பிறந்தாள்? இவள் எக்குலத்தில் பிறந்தவள்?

    2)
    சிவகாமி சரிதம் உணர்த்தும் தத்துவம் என்ன?
    3)
    பல குணங்களைக் காட்டும் பாத்திரங்களைப் படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
    4)
    மனோன்மணீய நாடகத்தில் மனோன்மணியை ஆசிரியர் எவ்வாறு அறிமுகம் செய்துள்ளார்?
    5)
    சேரமன்னன் புருடோத்தமன் மொத்தம் எத்தனைக் களங்களில் வருகிறான்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-08-2017 10:02:27(இந்திய நேரம்)