Primary tabs
இந்தப் பாடம் முடியரசனின் கவிதைகள் பற்றியது. அவரது கவிதைக்குப் பொருளாய் அமைந்துள்ள உள்ளடக்கம் பற்றி விவரிக்கிறது. அந்தக் கவிதைகளில் அமைந்துள்ள கற்பனை, உவமை முதலிய அழகுகளை விளக்கியுள்ளது. காதல், அன்பு முதலிய மனித மேன்மைகளுக்கு அவர் தந்துள்ள சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளது.
இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
முடியரசன் என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறியலாம்.
அவரது கவிதைகள் பற்றிய தகவல்களை அறியலாம்.
அக்கவிதைகளில் பாடப் பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். முடியரசனின் மொழியுணர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.
சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்ற கற்பனை நலங்களை அறியலாம்.
முடியரசன் என்னும் கவிஞரின் சிறந்த ஆளுமையை உணரலாம்.