தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 2

    P10422 வில்லி பாரதம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?



    இந்த பாடம் பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது. வில்லிபுத்தூரார் பற்றிய வரலாற்றையும், வில்லிபாரதத்தின் கதையமைப்பு, வருணனை பற்றிய விளக்கத்தையும் கூறுகிறது. தனிவாழ்விலும் பொதுநிகழ்வுகளிலும் தூதுவிடுத்தல் பற்றிய குறிப்பினையும் பாண்டவர்கள் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்றதன் விளைவு பற்றியும் எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    • தமிழில் பாரதக் கதையைச் சொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி அறியலாம்.

    • தனி மனித ஒழுக்கத்தின் இழிவு, மேன்மை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • உலகில் அழிவைத் தரும் போருக்கு அடிப்படைக் காரணங்களுள் ஒன்று மண்ணாசை என்பதை எடுத்துச்சொல்லலாம்.

    • கண்ணனின் இளம்பருவ விளையாடல்கள், வீரச்செயல்கள் பற்றி அறியலாம்.

    • தருமத்தின் முன் அதர்மம் அழியும் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:01:48(இந்திய நேரம்)