தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புறநானூறு

 • பாடம் - 5

  p10435 - புறநானூறு

  பகுதி- 1

  பகுதி- 2

  பகுதி- 3

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  எட்டுத் தொகையுள் ஒரு நூலாகிய புறநானூறு பற்றி எடுத்துரைக்கிறது.

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் உலகியல் வாழ்க்கை பற்றிய உண்மைப் பதிவேடு ஆகவும், ஒப்பு இல்லாத உயர்ந்த இலக்கியமாகவும் இந்த நூல் விளங்குவதை உணர்த்துகிறது.

  அரசியல், கல்வி, அறம், அறிவியல் ஆகிய துறைகளிலும் இலக்கியம், இசை போன்ற நுண்கலைகளிலும் அன்றைய தமிழரின் நிலை பற்றி அறியப் புறநானூறு உதவுவதை விளக்குகிறது. அன்பு அருள், நட்பு, வீரம், மானம், ஈகம் (தியாகம்), ஈகை போன்ற பண்புகளில் அக்காலத் தமிழர் சிறந்து விளங்கியதைப் புறநானூறு மூலம் எடுத்துக் காட்டுகிறது.

  புறநானூற்றுப் பாடல்களின் இலக்கிய நலங்களை எடுத்து விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
  பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்.

  • சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையுள் சிறந்த ஒரு நூலாகிய புறநானூறு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர், புலவர், மக்கள் ஆகியோர்தம் உயர்ந்த பண்பாடுகள் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

  • மகளிரும் கல்வி, புலமை, வீரம் இவற்றில் சிறந்திருந்ததை அறிந்து கொள்ளலாம்.

  • புறநானூற்றுப் பாடல்களின் உயர்ந்த இலக்கியத் தரத்தை உணரலாம்.

  பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:09:16(இந்திய நேரம்)