தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.
    முதற் சங்கம் பற்றிக் கூறுக.

    முதற்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையில் நிலவியது. இச்சங்கம் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 அரசர்களால் 4440 ஆண்டுகள் நடத்தப்பெற்றது. 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்தனர். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்கள் பாடப்பெற்றன. இச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், முருகவேள், அகத்தியர் முதலிய புலவர்கள் இருந்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)