தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    நண்பர்களே! தமிழில் சமய மொழிபெயர்ப்புகள் பற்றிய சில செய்திகளை இதுவரை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தைக் கற்றதன் மூலம் மனத்தில் பதிந்துள்ள செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

    • சமய மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழில் ஏற்பட்ட கருத்தியல் வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

    • பல்வேறு சமயங்களும் தத்தம் கருத்துகளை மொழிபெயர்ப்பின்
      மூலம் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முறையினைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வகையில் இப்பாடம் சமய மொழிபெயர்ப்புகள் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்துள்ளது.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சீவக சிந்தாமணி, சமஸ்கிருதத்திலுள்ள எந்த நூலின் தழுவல்?
    2.
    பகவத் கீதை எந்த நூற்றாண்டில் முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?
    3.

    விவிலிய நூல் கி.பி.1774-ஆம் ஆண்டு யாரால் தமிழாக்கப்பட்டது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 19:20:07(இந்திய நேரம்)