தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5-தகவல் தொடர்பும் விளம்பர மொழிபெயர்ப்புகளும்

  • 5.5 தகவல் தொடர்பும் விளம்பர மொழிபெயர்ப்புகளும்

    நவீன அறிவியல் வளர்ச்சி காரணமாகத் தகவல் தொடர்புக் கருவிகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்கள் பிரம்மாண்டமாக உள்ளன. நாள்தோறும் வெளியிடப்படும் அனைத்துலகத் தகவல்களில் பல்வேறு மொழிகளிலுள்ள சொற்கள் இடம் பெறுகின்றன. இதனால் தமிழ் விளம்பரங்களின் மொழிபெயர்ப்புகளிலும் பிறமொழிக் கலப்பு ஊடுருவியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் உருவாக்கம் இன்னும் தொடக்க நிலையிலே உள்ளது. எனவே ஸ்டெபலைஸர், பூஸ்டர், யுபிஸ், ஆல்பா, பீட்டா, காமா, ஆன்டனா போன்ற பல சொற்கள் தமிழ் வடிவில் விளம்பரங்களில் வெளிப்படுகின்றன.

    விளம்பர வாசகங்களை உருவாக்கும் விளம்பர நிறுவனங்கள் நுகர்வோரை முன்னிறுத்தியே விளம்பரங்களை வடிவமைக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டின் நகர்ப்புறத்தில் ஆங்கிலமும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவது மேன்மையானது என்பது போன்று புனைவு உள்ளது. இதன் விளைவாக நுகர்வோரின் உடனடிப் பயன்பாட்டினுக்காகத் தயாரிக்கப்படும் தமிழ் விளம்பர மொழிபெயர்ப்புகளில் பிறமொழிக் கலப்பு அதிக அளவில் இடம் பெறுகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:04:05(இந்திய நேரம்)