தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    1. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றி விளக்குக.

    தமிழில் பல ஆண்டுகளாகப் பிறமொழித் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழித் திரைப்படங்கள் மொழி மாற்றம் மூலம் தொடர்ந்து தமிழ் வடிவம் பெறுகின்றன. எழுபதுகளின் பின்னர் தெலுங்குத் திரைப்படங்கள் அதிக அளவில் தமிழில் மொழி மாற்றம் பெற்றன. தெலுங்கிலிருந்து தமிழாக்கப்பட்ட சலங்கை ஒலி, வைஜெயந்தி IPS., போன்ற திரைப்படங்கள் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடின. அடிதடி, மாயாஜாலம், சமுகம், பக்தி திரைப்படங்கள் தெலுங்கிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.

    தற்சமயம் ஹாலிவுட்டில் தயாராகும் முக்கியமான ஆங்கிலத் திரைப்படங்கள், அதிக அளவில் தமிழில் மொழி மாற்றப்படுகின்றன. அதிரடிச் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படும் ஜாக்கி சான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:05:43(இந்திய நேரம்)