தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3. திரைப்படச் சார மொழி பெயர்ப்பு - குறிப்பு வரைக.

    பிறமொழித் திரைப்படங்களின் ஒலியமைப்பினை மாற்றாமல், திரைப்படம் திரையில் தெரியும் போது, அந்தக் காட்சிக்குரிய பாத்திரங்களின் தமிழாக்கப்பட்ட உரையாடலைத் தமிழ் எழுத்து வடிவில் திரையில் இடம் பெறச் செய்வது திரைப்படச் சார மொழி பெயர்ப்பு (sub title translation) ஆகும். திரைப்படத்தின் கதைப்போக்கு, உரையாடலுக்கேற்ப, திரைப்படச் சார மொழிபெயர்ப்பு அமைந்திருத்தல் வேண்டும். திரையில் தெரியும் காட்சியில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் பிற மொழிப் பேச்சினைத் தவிர்த்து விட்டு, தமிழ் எழுத்து வடிவத்தினையும் காட்சியையும் ஒருங்கிணைத்துக் காண்பதன் மூலம் திரைப்படத்தினை விளங்கிக் கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:05:50(இந்திய நேரம்)