தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - -சைவத்திருமுறைகள்

 • E
  பாடம் - 2

  P20212 - சைவத் திருமுறைகள்  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சைவ சமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். இப்பாடத்தில், திருமுறை என்பதன் விளக்கம், திருமுறைகளின் பெருமை, அவை ஓதப்படும் முறைகள் ஆகியவை விளக்கப்படுகின்றன.

  சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகள் பெறும் இடம், மற்றும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், யாப்பு, இசை ஆகியவற்றிற்குச் சைவத் திருமுறைகள் ஆற்றியுள்ள பங்களிப்பு - இவற்றை இப்பாடம் அறிமுகப்படுத்துகிறது.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  தமிழ் நாட்டுச் சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் சைவத் திருமுறைகள் யாவை என்பதை இனம் காணலாம்.
  தமிழ் இலக்கிய வரலாற்றுச் சூழலுக்குச் சைவ சமயம் தந்த இலக்கியக் கொடையை அடையாளங் காணலாம்.
  சைவ சமயம் சார்பாக எழுந்த புதிய இலக்கிய வடிவங்களை அறிந்து அவற்றை உரியவாறு வகைப்படுத்தலாம்.
  சைவம் வளர்த்த தமிழ் இசைப் பரப்பை இனங்கண்டு தமிழ் இசை மரபைப் போற்றிப் பாதுகாக்க வழி காணலாம்.
  பாடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் திருமுறைப்பனுவல்களைப் பொருள் உணர்ந்து ஓதும் முறைமையைக் கடைப்பிடிக்கலாம்.
  சைவசமயம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பெருங்கொடைகளை இனங்கண்டு, மேலும் இவ்வகையில் சமயத்தை மொழி வளர்ச்சிக்கு உரியவாறு பயன் படுத்தலாம்.
  சைவ இலக்கியங்களில் காணப்படும், வழிபாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பினையும் மனித நேயத்தையும் இனங்கண்டு மனித உறவுகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம்.
  சைவம் ஏற்றுப் போற்றிய முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு முதலியவற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கண்டு தெளியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:08:35(இந்திய நேரம்)