தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 2.7 தொகுப்புரை-2.7 தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    சைவத் திருமுறைகள் என்ற தலைப்பில் அமைந்த இவ்விரண்டாம் பாடத்தில் பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றிய விளக்கங்களும், அவற்றின் ஆசிரியர்கள் குறித்த சிறு அறிமுகமும் வழங்கப்பட்டுள்ளன. தேவாரமும், திருவாசகமும் தனியே ஒருபாடமாகவும், பெரியபுராணம் பிறிது ஒரு பாடமாகவும் விரித்துரைக்கப்படுவதால் எஞ்சிய திருமுறைகள் பற்றிய விளக்கங்கள் மட்டுமே இப்பாடத்தில் வழங்கப்பட்டுள்ளன. சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகளுக்கு உள்ள சிறப்பிடமும், தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கியம் மற்றும் யாப்பியல் வளர்ச்சியிலும், இசை வளர்ச்சியிலும் சைவத் திருமுறைகள் ஆற்றிய பங்களிப்பை இப்பாடம் சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளது. விரிவான செய்திகளைப் பார்வை நூல்களின் துணைகொண்டு அறிந்து கொள்ளலாம்.

     


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    திருமந்திரம் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
    2.
    திருமந்திரம் பாடப்பெற்ற தலம் எது?
    3.
    திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ள மூன்று அழகிய தொடர்களை எடுத்துக்காட்டுக.
    4.
    ‘திருமுகப்பாசுரம்’ சிறு குறிப்பு எழுதுக.
    5.
    காரைக்கால் அம்மையார் பாடிய நூல்கள் எவை?
    6.
    பதினொராந் திருமுறையுள் இடம்பெற்றுள்ள விநாயகர் பாமாலைகள் எவை?
    7.
    திருஞானசம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பிகள் பாடிய நூல்களின் பெயர்களைத் தருக.
புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 10:21:58(இந்திய நேரம்)