தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses

பாடம் - 5

P20335 சிறுகதைகளில் தத்துவ நெறிகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


தத்துவ நெறிகளை, இறையன்பு அவர்கள் எழுதிய சிறுகதைகளின் மூலம் இப்பாடம் விளக்குகிறது. அக்கதைகள் பறவை, விலங்கு, தாவரம் ஆகிய அஃறிணைப் பொருள்களின் வழியும், துறவியர் போன்ற உயர்திணையினரின் வழியும் தத்துவங்களைப் புலப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. செய்யும் தொழிலில் சிறப்பும் நேர்த்தியும் தத்துவ விளக்கத்தின் பயனே எனச் சிறுகதைகள் உணர்த்துவதை எடுத்துரைக்கிறது. முழுமையான அறிவைப் பெறுவதற்குத் தத்துவநெறி தேவைப்படுகிறது என்பதைச் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சிறுகதைகளில் தத்துவ நெறி எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை அறியலாம்.

  • மனித வாழ்க்கை செம்மையுறவும், பயனுடையதாக அமையவும் தத்துவநெறி மூலம் சிறுகதைகள் வழிகாட்டுவதைக் காணலாம்.

  • வாழ்க்கை நெறியை உலகின் எந்தப் பொருளிலிருந்தும் பெறமுடியும் என்பதைச் சிறுகதைகள் காட்டுவதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 16:08:13(இந்திய நேரம்)