தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.3 தொகுப்புரை

    செய்தித்தாள் பல பிரிவினரின் கூட்டு முயற்சியால்தான் வெளியிடப்படுகின்றது. ஏதாவது ஒரு பிரிவின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் செய்தி வெளியீட்டில் சுணக்கம் ஏற்படும். பொதுவாக ஆசிரியர் பிரிவு, இயந்திரப் பிரிவு, அச்சுக் கோக்கும் பிரிவு அல்லது அச்சு வார்ப்புப் பிரிவு, படங்களை உருவாக்கும் பிரிவு, அச்சுப்படி திருத்தும் பிரிவு என்று செய்தித்தாளின் உருவாக்கப் பணி ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஆசிரியர் குழுவினர்தான் செய்திகளை எழுதுகின்றனர். அச்சுக் கோக்கும் பிரிவில் கையால் அச்சுக் கோத்தல், தனியெழுத்து அச்சுக் கோத்தல், தொடர் எழுத்து அச்சுக் கோக்கப்படுகிறது. சில நாளிதழ்களில் அச்சு வார்ப்பு நடைபெறும் முறையுண்டு என்பதால் அம்முறைகளையும் இப்பாடத்தின் அச்சு வார்ப்புப் பகுதி விளக்குகின்றது. படங்களைப் படக்கட்டைகளாகச் செய்யும் முறைகளைப் படக்கட்டை செய்யும் பகுதியில் காணலாம். அச்சடிக்கும் பிரிவின் பல்வேறு பணிகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அச்சுப்படி திருத்தும் பிரிவு மிகவும் இன்றியமையாதது. ஒரு நாளிதழ் தரமாக, பிழையின்றி வெளிவர மொழி அறிவு பெற்ற படிதிருத்துபவரின் பணி மிகவும் இன்றியமையாதது என்பதும் இப்பாடத்தில் சுட்டப்பட்டுள்ளது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    ஆப்செட் முறையில் வண்ணப் படங்களை அச்சிட முடியுமா?

    2.

    அச்சுப்படி திருத்துபவர் எப்படிப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 16:32:29(இந்திய நேரம்)