Primary tabs
- இப்பாடத்தில் நம்பியகப் பொருள் நூல், ஆசிரியர் பற்றி
அறிந்து கொள்ள முடிந்தது. - அகப்பொருள் களவு, கற்பு என்று இரண்டு ஒழுக்கங்களை
(கைகோள்) உடையது என அறிய முடிந்தது. - தமிழர்களின் களவு வழிப்பட்ட மணம்
வடமொழியாளர்களின் காந்தருவ மணத்தை ஒத்தது என்ற
தெளிவு கிட்டியது. - கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று
நான்கு வகைப்படும் என்பது தெரிகிறது. - களவிற்குரிய கிளவித் தொகைகள் பற்றிய விளக்கங்களைப்
பெற முடிந்தது. - பழந்தமிழர்களின் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையை
எதிர்நோக்கியே அமைந்திருந்ததை விளங்கிக் கொள்ள
முடிகிறது.