தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

6)
நெற்பயிர்களை வருணிக்கும் புலவர் கூறும் உவமைகள்
யாவை?
1)
பயிர்கள் நிமிர்ந்து நின்றன. அது புலவர்களை உயர்ந்தோர்
கண்டு வரவேற்று அன்பாகப் பேசும் போது, அப்புலவர்கள்
இறுமாந்து நிற்பது போல நின்றன என்று கூறுகிறார்.
2)
நெற்கதிர்களில் அன்னப்பாலுற்று முற்றியபோது கர்ப்பம்
முதிர்ந்த கற்புடைய பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பது
போல நின்றன என்று கூறுகிறார்.
3)
நன்கு முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்து கிடந்ததை, துன்பம்
மிகுந்த உலகில் சான்றோர்களின் தலை நிமிராத்
தன்மையினைப் போல் இருக்கிறது என்றும் உவமைகளைக்
கூறுகிறார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:14:47(இந்திய நேரம்)