Primary tabs
5.9 தொகுப்புரை
இந்தப் பாடத்தில் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களான கனகாபிசேகமாலை, இராஜநாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம் ஆகியவை பற்றி அறிந்து கொண்டோம். இவற்றில் கூறப்படும் நபிகள் நாயகம், ஹஸன், ஹுஸைன், நபி சுலைமான், முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, செய்யிது இப்ராகீம் ஆகியோரின் வாழ்க்கையின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டோம். காப்பியங்களின் பெயர்க்காரணம், ஆசிரியர், அமைப்பு, காப்பியங்களில் இடம் பெறும் சிறப்புச் செய்திகள், இலக்கிய நயம் ஆகியவை பற்றியும் அறிந்துகொண்டோம்.