தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.5 தொகுப்புரை

2.5 தொகுப்புரை

    இப்பாடத்தினால் நாம் அறிந்து கொள்ளும் சிறப்பான
செய்திகள் பின்வருமாறு:

  • சங்க காலம் தமிழ்மக்களின் பொற்காலம்.
  • இக்காலம் அகம், புறம் என்ற அடிப்படையில் அமைந்த தனிச்
    செய்யுட்களின் காலமாகும்.
  • சங்க காலத்தை வரையறுத்தலில் கருத்து ஒற்றுமை இல்லை.
    எனினும் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகள் என்பது பலரும்
    வற்புறுத்தும் கருத்து.
  • மன்னர் சிலர் உதவி பெற்றுச் சான்றோர்கள் இவ்வுதிரிப்
    பாடல்களைத் தொகுத்தனர்.
  • அகம், புறம் என்ற திணைப்பாகுபாடும், பா வகையும்,
    செய்யுட்களின் அடியளவும்     தொகைகள் அமைய
    அடிப்படைகளாயின.
  • எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று மொத்தம் 9
    தொகுதிகளை உடையது சங்க இலக்கியம்.
  • எட்டுத்தொகை நூல்களை (1) அகம் சார்ந்தன (2) புறம்
    சார்ந்தன (3) இரண்டும் கலந்தன என்று மூன்று பகுதிகளாகக்
    காணலாம்.
  • பத்துப்பாட்டிலுள்ளவை (1) அகம் (2) புறம் என்ற இரு
    பிரிவுகள் அடங்கும். புற இலக்கியங்களுள் ஆற்றுப்படைகள்
    ஐந்து என்பது குறிக்கத்தக்கது.
  • திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் பெயரால்
    அறியப்படுவது தனிச்சிறப்பு.
  • ஒவ்வொரு நூலின் தனித்த பண்புகளையும் அறிந்து கொள்ள
    முடிந்தது.
  • சங்க இலக்கியங்கட்குரிய சில தனிப்பட்ட பண்புகளை அறிந்து
    கொண்டோம்.
1.
பத்துப்பாட்டில் மிகச்சிறிய பாட்டு எது?
2.
தொண்ணூற்றொன்பது மலர்களைத் தம் பாட்டில்
விளக்கிய புலவர் யார்?
3.
பத்துப்பாட்டில் கடையெழு வள்ளல்களின் வரலாறு கூறும்
பாட்டு எது?
4.
உப்பு வாணிகம் செய்த மக்களின் பெயர் யாது?
5.
தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய புலவர் யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:44:41(இந்திய நேரம்)