தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

3.4 தொகுப்புரை

  • நாட்டுப்புற இலக்கிய வகைமைப்பாடு என்ற இப்பகுதியில்
    நாட்டுப்புற வழக்காறுகள் தனித்தனியாகப் பகுத்துக்
    காணப்பட்டுள்ளன.

  • நாட்டுப்புற இலக்கிய வகைமை - வகை இவ்விரண்டிற்குமான
    வேறுபாட்டை விளக்கி வகை என்பது வகைமைக்குள்
    அடங்கும் என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது.

  • நாட்டுப்புற வழக்காறுகள் நாட்டுப்புற இலக்கியம்,நாட்டுப்புறக்
    கலைகள் என்று இரண்டாக வகைமைப் படுத்தப் பட்டுள்ளன.

  • நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள் ஒவ்வொன்றாக விளக்கப் பட்டுள்ளது.

  • நாட்டுப்புறக் கலைகளையும் மூன்றாக வகைப்படுத்தி
    அவற்றையும் தனித்தனியாக விளக்குகிறது, இப்பாடம்.

  • நாட்டுப்புற வழக்காறுகளைப் பற்றி வகைமைப் படுத்திப்
    பார்ப்பதன்     மூலம்     அம்மக்களின் பண்பாட்டினை
    அறிய முடியும்.
  • 1)
    நாட்டுப்புற இசையினை எதில் காணலாம்?
    2)
    நாட்டுப்புற மருத்துவத்தை எத்தனை
    வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
    3)
    சிற்பங்கள் எவற்றில் செதுக்கப்படுகின்றன?
    4)
    கூத்து எத்தனை வகைப்படும்?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)