Primary tabs
மாணவர்களே!
பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி
இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம்:
-
சாதிமதங்களற்றது
-
வருணப்பாகுபாடற்றது
-
சமத்துவத் தன்மை உடையது
-
மூடப்பழக்கங்கள் இல்லாதது
-
சுயமரியாதை மிக்கது
-
உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது
-
எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது
இந்தச்
சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை.
அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப்
பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய
முயலவேண்டும்.