Primary tabs
C01132 : பாரதிதாசனின் சமுதாயம்
பாரதிதாசனின்
பொதுவுடைமை நோக்கை இப்பாடம்
எடுத்துரைக்கின்றது; சாதி வேறுபாட்டுணர்வைக் கண்டித்துச்
சாய்க்கும் (வீழ்த்தும்) அவர் கவிதைகளின் சாற்றைப் பிழிந்து
தருகின்றது; மத வெறியால் குலைந்து போகாதீர் என்று குரல்
கொடுக்கும் அவர் பாடல்களை இனம்
காட்டுகிறது.
பகுத்தறிவு என்ற உலகம் நோக்கி மனித சமுதாயம் நடையிடத்
தூண்டும் அவர் முழக்கங்களை எடுத்துரைக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- கவிஞன் ஒருவனின் உள்ளத்தை உணரலாம்.
- எது சீர்திருத்தம் என அறியலாம்.
- சமூக
இருள் எது? சமூக அவலம் எது? எனப்புரிந்து
கொள்ளலாம். - வாழ்க்கையின்
செம்மை எவற்றின் வழி எய்தப்படும்
என்பதைக் கவிஞன் காட்டும் நெறியிலிருந்து தெளியலாம். - புன்மை எது புரட்சி எது என விளங்கிக் கொள்ளலாம்.
- தமிழ்ச்
சமூகத்தின் நிகழ்காலம் எப்படிப்பட்டது என்றும்
அச்சமூகம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க
வேண்டுமென்றும் கண்டு கொள்ளாமல்