தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.5

2.5 தொகுப்புரை

ஒரு நாட்டை ஆட்சி செய்யும் ஒரு மன்னனுக்கு, அஞ்சாமை,
ஈகை,     ஊக்கம் போன்ற     இயல்புகள் இயற்கையாக
அமைந்திருக்கும். அவற்றோடு, அவன் செயற்கையாக, முயற்சியின்
வாயிலாக அறிவைப் பெறவேண்டும்.

நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டத்தை இயற்றல்,
வரிகளை வசூலித்து ஈட்டல், அதைப் பாதுகாத்தல், பின்னர்
முறையாகப் பகிர்ந்து அளித்தல் போன்றவை ஒரு மன்னனின்
முதன்மையான கடமைகள்.

மேற்குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவனுக்குச்
சிறந்த கொடை உள்ளமும், இரக்க உணர்வும், செங்கோல்
செலுத்தும் ஆற்றலும், குடியை ஓம்பும் பண்பும் அமைந்திருக்க
வேண்டும்.

இவற்றோடு அமையாது, மக்களோடு பழகும் முறையில் காட்சிக்கு
எளியவனாகவும், இனிய சொல்லை உடையவனாகவும் இருக்க
வேண்டும். இவற்றையெல்லாம் கொண்டு ஆட்சி செய்யும் நாடு,
மிகச் சிறந்த நாடாகக் கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II


1.


ஒரு மன்னனின் செயல் திறன்களாக வள்ளுவர்
கூறுவன யாவை?

2.

கொடை என்பதை எப்பொருளில் வள்ளுவர்
பயன்படுத்தியுள்ளார்?

3.

யாருக்கு இரக்கம் காட்டக் கூடாது?

4.

முடியாட்சி காலத்தில் மன்னன் யாருக்குச்
சமமாகக் கருதப்பட்டான்?

5.

எவை எல்லாம் ஒரு நாட்டிற்கு அழகு
தருபவைகளாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

6.

இனிய சொல் எதற்கு உவமையாகக்
கூறப்பட்டுள்ளது?


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)