Primary tabs
4.4 நெறிமுறைகளின்
பயன்பாடு
சொல்லாக்க
நெறிமுறைகள் என்பன அறிவியல் ரீதியில்
ஆய்வினை மேற்கொள்வதற்கான அடித்தளம்
ஆகும்.
உலகமெங்கும் வழக்கிலிருக்கும் தமிழில்
சீர்மையை
வலியுறுத்திடவே சொல்லாக்கத்திற்கான
நெறிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளன. இவை அறிமுக
நிலையில்
மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடர் தரலாம்; எனினும் நாளடைவில்
தொடர்ந்து பயன்பாட்டில் நடைமுறையாகி, பின்னர் பெருவழக்குப்
பெற்றுவிடும்.
சொல்லாக்கத்தில் பின்பற்றப்படும்
சில நெறிமுறைகள்
தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
4.4.1
உலக வழக்கு
சொல்லாக்கத்தின்போது பன்னாட்டு
அளவில்
பயன்படுத்தப்படும் சில சொற்களை அப்படியே ஒலிபெயர்ப்பு
வடிவில் தமிழில் வழங்க வேண்டும். அனைத்துலக
அளவில்
பலரால் மூலச் சொற்களாக வழங்கப்படும் சொற்களை அப்படியே
தமிழாக்கிக் கொள்வது ஏற்புடையதே.
இத்தகைய
சொல்லாக்கங்களில் மொழித் தூய்மை பேணுவது பொருத்தமன்று.
எடுத்துக்காட்டு:








4.4.2
கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள்
சில அறிவியல் சொற்கள்,
கண்டுபிடிப்பாளர்களின்
பெயர்களில் அமைந்துள்ளன. இத்தகைய
சொற்களைத்
தமிழாக்கும்போது, தமிழின் அமைப்பிற்கேற்ப ஒலிபெயர்த்துக்
கொள்ளலாம்.
எடுத்துக்காட்டு:
4.4.3
காரணம் கருதிய சிறப்புப் பெயர்கள்
காரணம் கருதி ஒரு மொழியில் வழங்கப்பட்ட சிறப்புப்
பெயர்களைத் தமிழில் சொல்லாக்கும் போது ஒலிபெயர்த்துக்
கொள்ள வேண்டும். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட நாடு
என்பதனால் New Found Land எனவும், கடல் மட்டத்திற்குக்
கீழ் உள்ள நாடு என்பதனால்
Netherland எனவும்
அழைக்கப்படுகின்றன. எனவே அவற்றை
அப்படியே
பயன்படுத்தலாம்.
4.4.4
குறியீடுகள்
உலக அளவில் அறிவியலில் பல்வேறு குறியீடுகள்
பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்க மொழியிலுள்ள ஒவ்வொரு
எழுத்தும், ஒரு கருவைத் தன்னுள் கொண்ட குறியீடாக
உலகமெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை அவ்வாறே
தமிழில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு:






4.4.5
எழுத்துகள்
ரோமன் எழுத்துகளைக் குறியீடாகப் பயன்படுத்தும்
வழக்கம்
அறிவியல் உலகில் நிலவுகிறது. இத்தகைய எழுத்துகளைத் தமிழ்ப்
படுத்த வேண்டியது இல்லை.
Velocity என்ற ஆங்கிலச் சொல்லின்
முதல் எழுத்தான V
என்பது உலகமெங்கும் திசைவேகம் என்பதனை
குறிக்கப்
பயன்படுகிறது.
புவியீர்ப்பு முடுக்கத்தினைக் (Acceleration
due to gravity)
குறிக்க g என்ற ரோமன் எழுத்தினைப் பயன்படுத்தும் வழக்கம்
உள்ளது.
இவை போன்ற ஆங்கில எழுத்துகளைத்
தமிழாக்கினால்
குழப்பம் ஏற்படும். எனவே அனைத்துலக
வழக்கினைப்
பின்பற்றுவதே ஏற்புடையதாகும்.
4.4.6
சூத்திரங்கள்
வேதியியல் துறையில் அணு,
மூலக்கூறு ஆகியவற்றையும்
அவற்றின் சேர்க்கையில் விளையும் பொருட்களையும் குறிப்பிடப்
பயன்படுத்தப்படும் So2, H2O2 போன்ற சூத்திரங்கள்
ரோமன்
எழுத்தில் உலக அளவில் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைத்
தமிழ் எழுத்துகளில் மாற்றுவது குழப்பத்தினைத் தரும். எனவே
அனைத்துலக வழக்கினைத் தமிழ்ச் சொல்லாக்கத்தில் பயன்படுத்த
வேண்டும்.
4.4.7
அளவைகள்
அறிவியல் துறைகளில் அளவைகளின்
பயன்பாடு அதிகம்.
அவற்றில் சில அளவைகள் நம் நாட்டின் தேசிய அளவையாக
ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. எனவே அவற்றைத்
தமிழில்
சொல்லாக்கும் போது ஒலிபெயர்ப்பு வடிவினைப் பயன்படுத்திக்
கொள்ளவேண்டும்.
எடுத்துக்காட்டு:
4.4.8
இடுகுறிச் சொற்கள்
சில அறிவியல் சொற்கள்,
பொருட் பெயர்களின்
மூலமொழியிலுள்ள முதலெழுத்துகளின் கூட்டிணைவாக உள்ளன.
இத்தகைய சொற்களை ஒலிபெயர்ப்பில்
சொல்லாக்குவது
ஏற்புடையது.
RADAR : Radio Detecting
And Ranging என்ற
சொற்றொடரின் முதல் எழுத்துகள் சேர்ந்து RADAR
என்று
ஆகிறது.
Light Amplification by
Stimulated Emission and
Radiation என்ற சொற்றொடரின் முதல் எழுத்துகள்
சேர்ந்து
LASER ஆகிறது.
இவற்றைத் தமிழில் ரேடார்,
லேசர் என்று அழைப்பது
பொருத்தமானது.