தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20222l5-3.7 தொகுப்புரை

3.7 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை திவ்வியப்பிரபந்தம் பற்றிய
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
1)
திவ்வியம் என்றால் என்ன என்பது பற்றியும் பிரபந்தம்
என்பதன் சொற்பொருள் பற்றியும் அறிந்து இருப்பீர்கள்.
2)
ஆழ்வார் என்பதற்குக் கூறப்படும் விளக்கங்களை
அறிந்து இருப்பீர்கள்.
3)
நாதமுனிகள், திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்த
முறை - இயல், இசை, நாடகம் என்னும் தமிழ்
மரபோடு பொருந்தி வருவதைப் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
4)
மேலும் முன்னைய தமிழ்மரபுகள் சிலவற்றை
உள்வாங்கிக் கொண்டு அவர் திவ்வியப் பிரபந்தத்தைத்
தொகுத்திருப்பதையும் அறிந்து இருப்பீர்கள்.
5)
ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களின் எண்ணிக்கை,
பாசுரங்களின் எண்ணிக்கை, திருக்கோயில்களில்
திவ்வியப்பிரபந்தத்துக்கு உள்ள முதன்மை, திராவிட
வேதம் என்னும் சிறப்பு முதலியன பற்றியும் விரிவாக
உணர்ந்து இருப்பீர்கள்.

1.
ஆழ்வார்களின் பிரபந்தங்களில் பாடியவர்களால்
பெயர் பெற்றவை எவை?
2.
அரையர் சேவை என்றால் என்ன?
3.
ஆழ்வார்களின் பாசுரங்களின் வாயிலாக
வைணவத்தைத் தனிப்பெரும் சமயமாக வளர்த்தவர்
யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:10:10(இந்திய நேரம்)