Primary tabs
சில நியமங்கள் (கட்டுப்பாடுகள்) வேண்டியிருத்தலின் அவை
செய்வதற்கு அரியனவாம். பிரபத்தி யோகமே எல்லோராலும்
செய்தற்குரியது; எளியது. ஆதலின் ஆழ்வார்கள் தம்
பாசுரங்களில் பிரபத்தி நெறி பற்றியே மிகுதியும் வலியுத்திப்
பாடியுள்ளனர்.
இ்ந்நெறி சரணாகதி, பரந்யாசம், பரசமர்ப்பணம் என்ற
பெயர்களாலும் வழங்கப்பெறும்.
(பயனாகவும்) கொண்டு அவன் திருவடிகளில் தஞ்சம் புகும்
அடைக்கல நெறியே பிரபத்தி எனப்படுகிறது. தனக்கு வேறு
புகலிடமற்ற நிலையையும் (புகலறுதி), தன்னைக்
காத்துக்கொள்ளக்கூடிய செயலற்ற நிலையையும் (செயலறுதி)
நினைத்து இறைவனைச் சரணடைவதே பிரபத்தி யோகமாகும்.
மற்ற நெறிகளில் ஆறும் (வழியும்) பேறும் (பயனும்) வெவ்வேறாக
உள்ளன. இந்நெறியில் இரண்டும் ஒன்றாக அமைகின்றன.
இது, கைகால் முதலிய உறுப்புக்களால் செய்யப்படுவது
அன்று. இறைவன் நம்மைக் கைவிடான் : என்னும் திடமான
எண்ணமே இதற்கு அடிப்படை. என்னைக் காத்தருள
வேண்டிய பாரம் உன்னைச் சார்ந்ததாதலால் உன்னை
எதிர்பார்த்திருப்பது தவிர என்னால் ஆவது ஒன்றுமில்லை
என்னும் திடமான எண்ணத்துடன் அவன் காலைக் கட்டிக்
கொள்வதே இதன் இலக்கணமாகும்.
நெறியெல்லாம் எடுத்துரைத்த
நிறைஞானத்து ஒரு
மூர்த்தியான கண்ணபிரான், தன் திருவடிகளையே தஞ்சமாகப்
பற்றும்படி கீதையிலே கூறியிருக்கிறான். சர்வதர்மான்
எனத்தொடங்கும் சரம சுலோகம் அது. (இறுதியாக
உபதேசிக்கப்படும் மந்திரம். முதல் இரண்டு மந்திரங்கள்
அஷ்டாட்சரம், த்வயம்
என்பவையாம்.)
மாயன் அன்று ஓதிய வாக்கு
(நான்முகன் திருவந்தாதி, 71)
(ஆயன் = ஆயர்குலத்தில் அவதரித்த கண்ணன்;
துவரைக்கோன் = துவாரகைக்குத் தலைவன்; மாயன் =
திருமால், கண்ணன்)
என்று திருமழிசையாழ்வார் இதனைக் கொண்டாடியிருக்கிறார்.
நாச்சியாரோ, மெய்ம்மைப் பெருவார்த்தை (நாச்சியார்
திருமொழி 11-10) என்று சிறப்பித்திருக்கிறார்.
இங்ஙனம் கண்ணபிரான் காட்டிய பிரபத்தி என்னும்
சரணாகதி நெறியே
ஆழ்வார் அனைவராலும்
ஏற்கப்பட்டிருக்கிறது.
(பெருமாள்திருமொழி : 5-1)
(சரண் = திருவடிகள்; சரண் = புகல்)
என்பார் குலசேகரர்.
(பெரியதிருமொழி : 5-8-1)
என்பார் திருமங்கையாழ்வார்.
நான் எங்கும் காண்கின்றிலேன்
(பெரியாழ்வார் திருமொழி : 5-3-4)
என்பார் பெரியாழ்வார். நம்மாழ்வாரும்,
(தி.வா.மொ. 9-1-10)
(சரண் = புகல்)
(தி.வா.மொ. 5-7-10)
(ஆறு = உபாயம், வழி; சரணாக = புகலாக , உபாயமாக)
(தி.வா.மொ. 5-10-11)
(சரண் = திருவடிகள்; சரண் = புகல், உபாயம்)
என்று பலவிடங்களிலும் சரணாகதி பற்றிப் பேசியுள்ளார். அவரே
திருவேங்கடமுடையானிடம்
சரண் புகுந்ததை,
அலர்மேல் மங்கை உறைமார்பா:
நிகரில் புகழாய்: உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே:
புகல்ஒன்று இல்லா அடியேன்உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
(தி.வா.மொ. 6-10-10)
(அகலகில்லேன் = விட்டுப்பிரியேன்; இறையும் = சிறிது
நேரமும்;
அலர்மேல் மங்கை = தாமரைப்பூவில் உள்ள
திருமகள்)
என்னும் பாசுரத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படி ஆழ்வார்கள் அனைவருமே பிரபத்தி நெறி பற்றிப்
பேசியவர்களாதலால் அவர்களுக்குப் பிரபந்நர்கள் என்றும்,
அவர்களின் தலைவரான நம்மாழ்வாருக்கு,
பிரபந்ந
ஜனகூடஸ்தர் என்றும் பெயர் ஏற்பட்டது. (பிரபந்நர் -
பிரபத்திநெறியைக்
கடைப்பிடிப்போர். பிரபந்ந ஜனகூடஸ்தர் -
அந்நெறியைக் கடைப்பிடிப்போர்க்குத்
தலைவர்)
வேண்டும் (காலதேச அதிகாரி நியமங்கள்) என்பது போன்ற
வரையறைகள் இப்பிரபத்தி நெறிக்கு இல்லை. அசுத்தனுக்குச்
சுத்தி தேடவேண்டியதில்லை. கங்கையிலே நீராடப்போகிறவன்
ஓர் உவர்க்குழியிலே இறங்க வேண்டுமா? வீடணன் கடல் கடந்து
வந்தபோது ஒருமுழுக்கிட்டு வந்து இராமபிரான் திருவடிகளைப்
பற்றவில்லையே? ‘திரௌபதி தன்னைத் தூய்மை செய்துகொண்டா
கோவிந்தா என்று கூப்பிட்டாள்?’ பார்த்தனும் சரம சுலோகம்
கேட்டது போர்க்களத்திலே அல்லவா? எனவே பிரபத்தி
செய்வார் தூயராய் நின்று பிரபத்தி செய்ய வேண்டும் என்னும்
நியதி இல்லாமை தெளிவாகின்றது. இந்நெறிக்கு ஒரு தூய்மையும்
வேண்டா; தூய்மையின்மையை ஈட்டவும் வேண்டா.
நின்றநிலையே அமையும். எல்லாவிடத்திலும் எல்லாக்காலத்திலும்
எல்லாரும் இதனைச் செய்யலாம். எல்லாப் பலன்களையும் இது
கொடுக்கவல்லது.
ஆனால் ஸ்ரீமந்நாராயணனிடத்திலேயே இதனைச்
செய்யவேண்டும் என்னும் வரையறை (விஷயநியமம்) மட்டுமே
இப்பிரபத்தி நெறிக்கு உண்டு. சாதாரணமானவர்களும் பிரபத்தி
செய்வதற்காகவே இறைவன் கோயில்களில் அர்ச்சை வடிவில்
(திருவுருவத்தோடு - சிலை வடிவில்) காட்சி தருகிறான்.
இறைவனுக்குரிய பரத்வம் (விண்ணாட்டுநிலை) முதலான ஐவகை
நிலைகளில் அர்ச்சாவதாரமே அவனை அணுகி வழிபடுவதற்கு
ஏற்றது. எனவே ஆழ்வார்கள் பல இடங்களிலும்,
அர்ச்சையிலேயே சரணாகதி செய்து (ஸ்ரீவசனபூஷணம்,
சூத்திரம், 38) அடியார்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
இதனால் பிரபத்தி மூலம் தன்னையே நேரே பற்றினார்க்கு
இறைவனே வழியாக அமைகிறான் என்பதும், பிரபத்தியை ஒரு
காரணமாகக் கொண்டு உயிர்களைக் காத்தருளுகின்றான்
என்பதும் இனிது விளங்கும்.
யாவை?