தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225l5-5.5 தொகுப்புரை

5.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை இராமாநுசர் பற்றிய பல முக்கியமான செய்திகளை அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
1)
மனிதகுல வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு
தத்துவ மேதையாகவும் சமூகப் புரட்சியாளராகவும்
வாழ்ந்தவர் இராமாநுசர் என்பதை அறிந்திருப்பீர்கள்.
2)
இத்தகைய காரணங்களாலேயே சமய எல்லையைத்
தாண்டிப் பலரும் மதித்துப் போற்றும்
பெருமைக்குரியவராக அவர் உயர்ந்து நிற்பதும்
உங்களுக்கு விளங்கியிருக்கும்.
3)
சாதி பேதங்களைக் கடந்தவர் இராமாநுசர்
என்பதையும் அதனைச் செயல்முறையில்
கடைப்பிடித்துக் காட்டியவர் என்பதையும்
உணர்ந்திருப்பீர்கள்.
மன்னுயிர்களுக்காக இரங்கித் தம் - ஆத்மலாபமாகிய
முக்தியையும் துறக்கச் சித்தமானவர் இராமாநுசர்.
எனவே கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்களும்
இராமாநுசரை வியந்து நோக்கியதையும் புகழ்ந்து
பாடியதையும் அறிந்திருப்பீர்கள்.

இராமாநுசர் நிறுவிய விசிட்டாத்வைதக் கொள்கை,
அதற்கு ஆழ்வார் பாசுரங்களை அவர்
அடிப்படையாகக் கொண்டது, அவர் வடமொழியில்
மட்டுமே நூல்கள் எழுதியது, திவ்வியப் பிரபந்தங்களை
ஆழ்ந்து கற்றது, அவற்றைக் கற்குமாறு சீடர்களை
வற்புறுத்தியது, இராமாநுசர் நூல்களிலிருந்து எடுக்கப்
பெற்ற சில கருத்துகள் போன்றவைகளையும்
இப்பாடத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்து
கொண்டிருப்பீர்கள்.

1.
இராமாநுசர் நிறுவிய சமய நெறி எது?
2.
இராமாநுசர் இயற்றிய இரு நூல்களின் பெயர்களைக்
குறிப்பிடுக.
3.
இராமாநுசர் தம் சீடராகிய திருக்குருகைப் பிரான்
பிள்ளான் என்பாரை எதற்கு உரை எழுதுமாறு
வேண்டினார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:11:43(இந்திய நேரம்)