Primary tabs
3.1 தற்கால
நாடகங்கள்
தற்கால நாடகங்கள்
என்பது கி.பி.1870-லிருந்து
தொடங்குவதாகக் கொள்ளலாம். தொன்மை நாடகப்
போக்குகளிலிருந்து ஒரு மாற்றம் பெற்ற நிலையை நாடகம்
அக்காலக்கட்டத்தில் தான் அடைந்தது. மேலும் பல நாடக
மேதைகளும் தமிழகத்தில் தோன்றி நாடகப் போக்குகளை
மாற்றியமைத்தனர். 19ஆம் நூற்றாண்டில் பம்பாயில் தோன்றி
இந்தியா முழுவதும் நாடகம் நடத்திய பார்சி நாடகக்
குழுக்களின் தாக்கமும், உரைநடை வளர்ச்சி மேல்நாட்டு
நாடகப் போக்கின் தாக்கம் ஆகியனவும் தமிழ் நாடகத்தைப்
புதிய வடிவிற்குக் கொண்டு வந்தன.
ஆங்கிலக் கல்விக்
கற்ற காசி விசுவநாத முதலியார் 1867இல்
டம்பாச்சாரி விலாசம் என்ற முதல் சமூக நாடகத்தைப்
படைத்து அரங்கேற்றினார். மேலைநாட்டு நாடக அமைப்பில்
அங்கம், களம் ஆகிய பிரிவுகள் அமைந்தன. ஆனால்
நாடகம் தெருக்கூத்துப் பாணியிலேயே அமைந்திருந்தது.
அதன்பின் 1877இல் இராமசாமி ராஜா என்பவர் பிரதாப சந்திர
விலாசம் என்ற நாடகத்தை உரைநடையில் எழுதி வெளியிட்டார்.
இந்நாடகம் மூலம் அதற்கு முன்னிருந்த பாட்டு மயமே நாடகம்
என்னும் நிலைமாறியது. உரைநாடகம் என்னும் புதிய நாடக
அமைப்பு ஏற்பட்டது.