Primary tabs
ஒருவரோடு நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம்
வாயிலாகவோ தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டு
அறிவதை நேர்காணல் என்று கூறலாம்.
• கேள்விகள்
நேர்காணலில் கேட்கப் பெறுகின்ற கேள்விகள் தகவல்களைப்
பெறுவதற்காகக் கேட்கப் பெறுபவை. நீதிமன்றத்தில்
குறுக்கு விசாரணையில் கேட்கின்ற கேள்விகள் போன்றவை
அல்ல இவை. மேலும் நேர்காணல் இயல்பாக, இறுக்கமற்ற
சூழலில் அமையவேண்டும். கட்டுப்பாடோ, நெருக்கடியோ,
அச்சுறுத்தலோ நேர்காணலில் இருக்கக் கூடாது.
5.1.1 பங்குபெறுவோர்
நேர்காணல் நடத்தக் குறைந்தது இருவர் வேண்டும்.
ஒருவரைப் பலர் நேர் காணலாம். தலைவர்கள்
செய்தியாளர்களுக்கு அளிக்கும் நேர்காணல் இந்த வகையைச்
சார்ந்ததாகும்.
பலரை ஒருவர் நேர் காணலாம். செய்தியாளர்,
கூட்டமாக இருப்பவர்களிடம் தகவலைக் கேட்டு அறிவது
இந்த வகைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
“மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தல்; அதாவது
கூட்டம் நடத்தக் காணுதல்; செய்தித்தாளில்
பணியாற்றுகின்ற ஒருவரும் அவருக்கு வெளியிடுவதற்காகத்
தகவல்களைத் தரும் ஒருவரும் கூடிப் பேசுதல்” என்று
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி நேர்காணல் என்பதற்குப்
பொருள் தருகிறது.
இருவரோ, சிலரோ, பலரோ கூடி உரையாடுவது
நேர்காணல் ஆகாது. வெளியிடும் நோக்கத்தில் வினாக்கள்
எழுப்ப, அதற்குத் தக்க விடைகள் கிடைக்கும் பொழுதே
அது நேர்காணல் ஆகும்.
5.1.2 நேர்காணல் - நோக்கங்கள்
ஒவ்வொரு நேர்காணலும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு
நடத்தப் பெறுகின்றது. நோக்கம் இல்லாத நேர்காணலும்
உரையாடலும் நண்பர்களின் பொழுதுபோக்குப் பேச்சாக
இருக்குமே தவிர நேர்காணல் ஆகாது. ஆதலால் நேர்
காண்பவர் நேர்காணலின் நோக்கம் பற்றித் தெளிவாக
இருக்க வேண்டும். பொதுவாக, நேர்காணல் நடத்துவதற்கான
நோக்கங்களைப் பின்வருமாறு சுட்டிக் காட்டலாம்.
• நடப்பினை அறிதல்
நடந்து கொண்டிருக்கின்ற சில சுவையான
நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களையும், கருத்துகளையும்
அறியத் தொடர்பு உடையவர்களை நேர் காணலாம்.
• நிகழ்ச்சியின் விவரங்களை வெளிக் கொணரல்
நடைபெறப் போகும் ஒரு நிகழ்ச்சியின் விவரங்களை
அறிந்து வெளியிடுவதற்காக நேர்காணல் நடத்தலாம். ஒரு
மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் அதன்
அமைப்பாளரைக் கண்டு, நிகழ்ச்சியின் விவரங்களை அறிந்து
வெளியிட நேர்காணல் நடத்தலாம்.
• கண்ணோட்டத்தை வெளிப்படுத்தல்
தலைவர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள்
போன்றோரின் ஆளுமை, தனித்தன்மை ஆகியவற்றை
வெளிப்படுத்தவோ, அவர்களது கண்ணோட்டத்தை, கருத்தை
வெளிப்படுத்தவோ நேர்காணல் நடத்தலாம். சிறந்த நடிகரான
கமலஹாசனையோ, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனையோ
நேர் காணுதல் இப்படிப்பட்ட நோக்கத்திற்காக அமையும்.
5.1.3 நேர்காணலின் பயன்கள்
ஒரு நேர்காணலால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இவற்றை நேர்காணலின் பயன்கள் என்றும் கூறுவார்கள்.
முக்கியமான பயன்களைத் தொகுத்துக் கூறலாம்:
வழியில் இருக்கும் வேறுபாடுகளை வெளியே கொண்டுவரப்
பயன்படுகிறது.
கருத்தை உருவாக்குவதற்கு நேர்காணல் பயன்படுகிறது.
அதிகாரப் பூர்வமாக அறிய நேர்காணல் துணை
செய்கிறது.
பற்றி விளக்கமாய் அறிய நேர்காணல் பயன்படுகிறது.
வாசகர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக
நேர்காணல் அமைகிறது.
பல்வேறு கருத்துகள் ஆதரவாகவும் எதிராகவும்
வெளிவர அது வாய்ப்பு அளிக்கிறது.
ஒளிப்படங்களுடன் வெளியிடும் போது, சுவையான
கட்டுரை கிடைக்க, அது வாய்ப்பு அளிக்கிறது.