தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரிச் சொற்றொடர்

  • 3.6 உரிச் சொற்றொடர்

    உரிச்சொற்கள்    பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு
    அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர்
    எனப்படும்.     உரிச்சொல்லைப் பற்றிய செய்திகள் முந்தைய
    பாடத்தில் கூறப்பட்டன. அவற்றை நினைவு கொள்க.

    - இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறுபட்ட
          குணங்களை உணர்த்தும் பெயராய் வரும்.
    - ஒரு சொல் ஒரு பண்பையும் பல பண்புகளையும்
          உணர்த்தும்.
    - பெயர், வினைகளை விட்டு நீங்காது அவற்றிற்கு அடையாய்
          வரும்.
    - செய்யுளுக்கு உரியனவாய் வரும்.

    இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன.
    பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது.

    (எ.டு)

    சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதி என்னும் ஒரு குணம்
    குறித்தது.

    கடி - காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம் குறித்தது.

    (எ.டு) தடக்கை - பெயர்க்கு அடையாக வந்தது.
                 நனி வருந்தினான் - வினைக்கு அடையாக வந்தது.

    யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல்.

    பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
    ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
    ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் (நன்னூல் : 442)

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)