தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 2

A02142 கற்பியல்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

கற்பின் இலக்கணத்தை எடுத்துக் கூறுகிறது. கற்பிற்குரிய
கிளவித் தொகையை விளக்கிக் கூறுகிறது. இல்வாழ்க்கை,
பிரிவு பற்றிய நம்பி அகப்பொருள் செய்திகளை
விவரித்துக் கூறுகிறது. பிரிவு பற்றிய சில பொதுக்
கிளவிகளை எடுத்துக்காட்டுகிறது

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கற்பின் இலக்கணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
  • கற்பிக்குரிய கிளவித்தொகை ஏழு என்பதை அறிந்து
    கொள்ளலாம்.
  • இல்வாழ்க்கையானது கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி
    மகிழ்ச்சி, பாங்கி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி என்று
    நான்கு வகைப்படும் என்பதைத் தெளியலாம்.
  • இல்வாழ்க்கையின் பத்து விரிகளை அறியலாம்.
  • ஆறு வகையான பிரிவு பற்றி விளங்கிக் கொள்ளலாம்.
  • சங்ககாலத் தலைவர்களின் பரத்தையர் நுகர்வு பற்றி
    அறியலாம்.
  • தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடல் மற்றும்
    ஊடல் தணிதல் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)