தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4. விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

  • 4. விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

    இந்தப்பாடம் என்ன சொல்கிறது ?

    Audio Button

        இந்தியா பலப்பலப்     பகுதிகளாகப் பல்வேறு
    அரசர்களால் ஆளப்பட்டது. சிறு சிறு பகுதிகளாகக்
    குறுநிலமன்னர்களால் ஆளப்பட்ட நிலை மாறி
    ஒவ்வொரு காலத்தில்     ஒவ்வொரு பேரரசு
    பெரும்பகுதியை ஆளும் நிலை உருவாயிற்று. எனினும்
    காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஆட்சி
    செலுத்தியவர் ஆங்கிலேயரே! பிரெஞ்சுக்காரர்கள்,
    டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர் ஆகியோரைவிட
    ஆங்கிலேயரே இந்தியாவைப் பேராதிக்கம் செய்வதில்
    வெற்றி கண்டனர். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள்
    தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தினர்.
    இந்த ஆட்சியை அகற்ற மாபெரும் தேசிய
    இயக்கமாகக் காங்கிரஸ் மலர்ந்தது. விடுதலைப்போர்
    காந்தியடிகளின் தலைமையில் அறநெறியில் நிகழ்ந்தது.
    தமிழகம் தன் பண்பாடு விளங்க இப்போரில் அரிய
    செயல்களை ஆற்றியது. அப்போர் நிகழ்வுகள், அதன்
    விளைவுகள் அவற்றின் வழிப் புலப்படும் பண்பாட்டை
    இப்பாடம் விளக்குகின்றது.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)