Primary tabs
-
3. ஐரோப்பியர் காலப் பண்பாடு


ஐரோப்பிய நாகரிகம் தமிழர்களைக் கவர்ந்த சூழலை
இப்பாடம் விளக்குகின்றது; ஆங்கில மொழியின்மீது
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோகம் எந்த அளவுடையது
என்பதையும் இப்பாடம் எடுத்துரைக்கின்றது. இந்தியப்
பண்பாட்டுப் பின்னணியில் தமிழர் பண்பாடு
கொண்டிருந்த சிறப்பு இயல்புகள் விரிவாகக்
கூறப்பட்டுள்ளன. ஐரோப்பியப் பண்பாடு எந்த அளவு
தமிழர் வாழ்க்கையில் கலந்து நின்றது என்பதையும்
இப்பாடம் விளக்கமாகக் கூறுகின்றது. ஐரோப்பிய
ஆட்சியை எதிர்த்துத் தோன்றிய விடுதலை
இயக்கத்திற்குத் தமிழகம் செய்த பெருந்தொண்டையும்
நினைவுபடுத்துகின்றது.

