Primary tabs
தமிழக வரலாற்றை அறிய கி.பி. 6-ஆம் நூற்றாண்டின
பிற்பகுதியில் தொடங்கிய பிற்காலப் பல்லவர் மற்றும்
பாண்டியர் ஆட்சிக் காலங்களிலிருந்து மிகத் தெளிவான
வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. அவற்றின் வாயிலாகத்
தமிழக வரலாறு எழுதப் பெற்று வருகின்றது. இருப்பினும் கி.மு.
3-ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 3-ஆம் நூற்றாண்டு
வரை உள்ள காலகட்டத்திய வரலாற்றை அறிய, சங்கத் தமிழ்
நூல்கள் நமக்குத் துணைசெய்கின்றன. சில மேலை நாட்டு
வரலாற்றுக் குறிப்புகளும் நமக்குத் துணை நிற்கின்றன. சங்க
கால வரலாற்றையும், பின்னர் 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
வரை உள்ள இருண்டகாலம் எனப்படும் களப்பிரர் காலம்
பற்றியும் இப்பாடம் விவரிக்கின்றது.