தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    A03144 -பாண்டியர் வரலாறு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    இந்தப் பாடம் பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்ட
வரலாற்றைக் கூறுகிறது. பாண்டியர் வரலாற்றை அறிய உதவும்
மூலங்கள் எவை என்று காட்டுகிறது. பாண்டிய மன்னர்களில்
சிறந்து விளங்கியவர்களைப் பட்டியலிடுகிறது. முகமதியர்
படையெடுப்பால்      பாண்டியர்     வீழ்ச்சியடைந்ததைக்
குறிப்பிடுகிறது. பிற்காலப் பாண்டியர்களி்ன் ஆட்சி முறையை
விளக்குகிறது. அவர்கள் காலத்தில் காணப்பட்ட நாணயம்,
வணிகமுறை, கல்வி, சமயம், அவர்களுடைய பழக்க
வழக்கங்கள் முதலியவற்றை எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
  • பாண்டியர் வரலாறு அறிய உதவும் செப்பேடுகள் எவை
    என்று குறிப்பிட இயலும்.
  • பாண்டியர்களின் கால கட்டம், நான்கு பகுதியாகப்
    பகுக்கப்பட்டுள்ளதை விளக்க முடியும்.
  • முற்கால, இடைக்கால, பிற்காலப் பாண்டியர்களில் சிறந்து
    விளங்கிய மன்னர் யார் என இனம் காண இயலும்.
  • பாண்டியர்களுக்கு எதிராகப் போசளர்கள் தமிழகத்தில்
    களமிறங்கியதை உணரலாம்.
  • சோழரின் வீழ்ச்சிக்குப் பின் பாண்டியர் எழுச்சி பெற்றதைக்
    குறிப்பிடலாம்.
  • முகமதியர் படையெடுப்பு, சம்புவரையர் தனியாட்சி
    நடத்தியது ஆகியவற்றை உணரலாம்.
  • பாண்டியர்கள் நாட்டை அரசாண்ட முறையைத் தெளிவாக
    விளக்க இயலும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)