Primary tabs
மாணவர்களே, அந்நியர்
தமிழ் நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை
நிலை நாட்டியதற்கான காரணங்களைப்
படித்தீர்கள்
அல்லவா? ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தை
உணர்த்திருப்பீர்கள். இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்கள்
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், டேனியர், பிரெஞ்சுக்காரர்,
ஆங்கிலேயர் ஆவார். இவர்களில் பிரெஞ்சுக்காரரும்,
ஆங்கிலேயரும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். வாணிபம்
செய்வதற்காக வந்து நாடு பிடிக்கும் ஆசையில் ஈடுபட்டனர்.
முதலாம், இரண்டாம் கருநாடகப் போர்களின் விளைவால்
பிரெஞ்சுக்காரர்கள் வணிகச் செயல்களை மட்டும் கவனித்தனர்.
ஆங்கிலேயர்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு
வந்தனர். மூன்றாம் கருநாடகப் போரின் விளைவால் ஆங்கிலப்
படை பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது. பிரெஞ்சுக்காரர்கள்
காரைக்கால், புதுச்சேரி முதலிய இடங்களைத் தவிர ஏனைய
இடங்களை இழந்த வரலாற்றை அறிந்தீர்கள். ஆங்கிலேயரை
எதிர்த்துப் போரிட்டுத் திப்பு சுல்தான் வீரமரணம்
அடைந்தான். தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு
மராட்டியர்கள் தமிழகத்தை ஆண்டனர் தமிழகத்தில் இவர்கள்
காலத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை நிலவியது. இந்த
ஆட்சிமுறையைச் சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் நீக்கினார்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்
பூலித்தேவன்,
வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஐதர்அலி,
திப்புசுல்தான் ஆகியோர் போராடி வீரமரணம் அடைந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர்,
புதுக்கோட்டை
முதலிய சில சமஸ்தானங்களைத் தவிர்த்து
ஏனைய
தென்னிந்தியப்பகுதி முழுவதும் ஆங்கில ஆளுகையி்ன் கீழ்
வந்தது. இங்கிலாந்தில்
இயற்றப்படும் சட்டங்களின்படி இந்திய
மாநிலங்களை ஆங்கிலேயர் ஆண்டனர். சென்னை மண்டலத்தில்
1919-ஆம்
ஆண்டு இரட்டை ஆட்சிமுறை வந்தது. பின்பு
அம்முறை ஒழிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயரை
இந்தியாவிலிருந்து
வெளியேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி
கண்டது இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம்
தேதி விடுதலை அடைந்தது.
சட்டமன்றத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைச்
சென்னை ஆளுநர், எந்த ஆண்டில் பெற்றார்?