தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5 தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    பெயர்ச்சொல் என்னும் இந்தப் பாடத்தில் பெயர்ச்சொல்லின் பொது இலக்கணத்தையும் அறுவகைப் பெயர்களையும் படித்தோம். வினையாலணையும் பெயரையும் அதன் வகைகளையும், தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகளையும் பார்த்தோம். ஆகுபெயர் என்றால் என்ன என்பது பற்றியும் ஆகுபெயர்களின் வகைகள் பற்றியும் அறிந்தோம்.

    பயில்முறைப் பயிற்சி - 2

    இங்கே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் எந்த வகை ஆகுபெயர்கள் என்பதை எழுதுக.

    தாமரைக் கண்ணா வணக்கம் பாவை வந்தாள் இந்தியா வென்றது டிசம்பர் சூடினாள் தலைக்கு ஒரு மாம்பழம் காரம் வெறுத்தான் வற்றல் உண்டான் நூறு மில்லி ஊற்று ஐந்து அடி கேட்டு வாங்கு அந்தக் கூடையைக் கூப்பிடு. நூறு கிராம் வாங்கு வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை நான் பட்டு அணிவேன் நான் சமையல் படித்தேன் எனக்குப் பாரதி மனப்பாடம்

    1.
    ஆகுபெயர் என்றால் என்ன?
    2.
    அளவையாகு பெயர் எத்தனை?
    3.
    சினையாகு பெயரை விளக்குக.
    4.
    உவமையாகு பெயர் என்றால் என்ன?
    5.
    இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:47:23(இந்திய நேரம்)