தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03143 : அமைச்சர்

  • CO3143 : அமைச்சர்


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

    மதி நுட்பம், அறன் அறிதல், சொல்வன்மை, ஆகியவை எந்த
    வகையில், அமைச்சரின் தகுதிகளாக அமைந்துள்ளன என்பது
    முதலில் கூறப்படுகிறது. அடுத்த நிலையில், அமைச்சரின்
    ஆற்றல்கள் விளக்கப்படுகின்றன. ஆட்சியில் அமர்ந்திருக்கும்
    மன்னருக்கு யாரை நண்பராகக் கொள்ளலாம், யாரை
    நண்பராகக் கொள்ளக் கூடாது போன்ற அறிவுரைகளை
    அமைச்சர் கூறுவது பற்றிய செய்திகள் விளக்கப்படுகின்றன.
    உடனிருந்து கொண்டே, கேடு நினைத்தல், செயல் ஆற்றல்
    இல்லாதிருத்தல் போன்றவைகள் அமைச்சருக்குத் தகாதவை
    என்பது பற்றியும் இந்தப்பாடம் கூறுகிறது.


    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • முடியாட்சிக் காலத்திலுள்ள அமைச்சருக்கு உரிய
      தகுதிகளாக வள்ளுவர் கூறும் கருத்துகளைக் கற்றுக்
      கொள்ளலாம்.

    • அமைச்சருக்கு உரிய கடமைகள் எவை எவை
      என்பவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

    • அமைச்சருக்கு உரிய செயல்பாட்டின் வெற்றிக்கு
      அவர்களது ஆற்றல் எவ்வளவு இன்றியமையாதது
      என்பதை உணர முடியும்.

    • அமைச்சர் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
      முடியாட்சி காலத்திற்கு உரியதாக இருந்தாலும்,
      அவை குடியாட்சிக் காலத்திற்கும் பொருந்தும்
      தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)