தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20222l0-2.0 பாட முன்னுரை

  • 2.0 பாடமுன்னுரை
    தமிழகத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றிப்
    பக்தி நெறியைப் பரப்பிய காலமே பக்தி இயக்கக் காலம்
    எனப்படுகிறது. வரலாற்றாசிரியர்களை மட்டுமன்றித் தமிழ்
    அறிஞர்களையும் ஈர்த்த காலப் பகுதி இதுவாகும். இக்காலத்தில்
    தோன்றிய தேவாரம், திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்திப்
    பனுவல்கள் - அகம், புறம் ஆகிய முன்னைத் தமிழ் மரபுகளை
    உள்வாங்கிக் கொண்ட தனிச்சிறப்புடையவை. பக்தி இயக்கத்தைத்
    தமிழ்க் காப்பு இயக்கமாக மாற்றிய பெருமை மிக்கவை. எனவே,
    களப்பிரருக்குப் பின் பக்தி இயக்கம் என்னும் இப்பாடத்தில்,
    பக்தி இயக்கத்தின் சிறப்புகள் பன்முக நோக்கில் தொகுத்துக்
    கூறப்பட்டுள்ளன.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:30:25(இந்திய நேரம்)