1)
களப்பிரர் யார்? என்பது பற்றியும், அவர்கள்
காலத்துத்
தமிழகச் சூழ்நிலை என்ன? என்பது பற்றியும் அறிந்து
இருப்பீர்கள்.
2)
தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக்
காலமே பக்தி இயக்கக்
காலம் என்று அறிந்து கொண்டிருப்பீர்கள்.
3)
தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும்
வைணவமும் புறச் சமயங்களான சமண பௌத்தங்களை
வெற்றி கொண்டது எப்படி? - என்பதைத் தெரிந்து
கொண்டீர்கள்.
4)
தருக்க நெறியையும் அறவியலையுமே அறிவுப்
பூர்வமாக வற்புறுத்திய சமணரும் பௌத்தரும் பக்தி
நெறிக்குத் திரும்பியதற்கான காரணத்தையும் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
5)
தமிழில் இடையறாத் தொடர்ச்சியுடைய ஓர் இலக்கிய
வகையாகத் திகழ்வது பக்தி இலக்கியம் ஆகும்.
அதற்கான மூலகாரணம் பக்தி இயக்கமே என்பது
தெளிவாகப் புலப்பட்டிருக்கும்.