Primary tabs
-
4.0 பாடமுன்னுரை
இறைவனை அடைவதற்குரிய நெறிகளைக் கர்மயோகம்
(செயல்நெறி), ஞானயோகம் (அறிவுநெறி), பக்தியோகம்
(அன்புநெறி) என்பன கூறப்படுகின்றன. இவற்றுடன் சரணாகதி
(அடைக்கலநெறி), ஆசார்யாபிமானம் (ஆசிரியப்பற்று)
போன்றவைகளையும் நெறிகளாக எடுத்துரைப்பது உண்டு.
இவற்றுள் வைணவம் பெரிதும் வலியுறுத்திப் பேசும்நெறி இன்னது
என்பது இப்பாடத்தில் விளக்கிக் கூறப்படுகின்றது. பாடத்தின்
பிற்பகுதியில் வைணவ சமய வழிபாட்டு முறைகளான
வைகானசம், பாஞ்சராத்திரம் பற்றியும் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளது.